பள்ளி பருவ ஞாபகங்கள் 1



கண்ணுறங்க நேரமில்லாம கணப்பொழுதும் ஓயாம கையிரண்டும் சுத்தி சுத்தி தேஞ்சு போன தடயமெல்லாம் கட்டு கட்டா சேத்து வச்சு அவசரமா கடையேற, 

போர்க்களம் தான் போய் 

வருவா எங்கம்மா.. .

.

ஒரு நூலை சுத்தி குடுத்தா நாலனா தருவான்னு காசோட அருமைய சொல்லிக் குடுத்ததும்,

12 ஆ செத்து வச்சா ஒரு கட்டுனு கணக்கு பாடம் படிச்சதும்

அந்த பீடி தட்டு பாடத்துல தானே,

.

வார கடைசி ஆனா போதும் அம்மைக்கு சம்பளம் னு ஆட்டம் பாட்டம் போட்டுக்கிட்டு போயிருவோம் பின்னாலையே துரத்திக்கிட்டு,

பீடி கடையில இருந்து வரும் போதே குச்சி மிட்டாய் கணக்கு நோட்டு னு நான் ஒரு கணக்கு போட,

வாரத்துக்கு வீட்டோட மளிகைக்கு என்னென்ன வாங்கணுமுன்னு நீயும் ஒரு கணக்கு போட,

திருவிழாவாத் தான் தெரியும் அந்த சனிக் கிழமை சாயங்காலம் ...

.

அப்பா கிட்ட பயந்து கேக்க தைரியம் இல்லாம போனாலும், அம்மாக்கிட்ட அதட்டி கேக்க பயப்படாம போன அம்மாபிள்ளைக்கு தான் தெரியும், பீடித் தட்டு தூளுக்குள்ள புதையலா புதைச்சு வைச்ச 50 பைசாக்கு வாங்கி தின்ன ஐஸ் -யும், இன்னைக்கும் இனிப்பாத்தான் குளுந்து கிடக்குது நெனப்புக்குள்ள னு.

.

எம் பையன் வந்து கேட்டாலும் கேக்காம தான் போனாலும் சொல்லி தான் குடுக்கணும்,

அம்மையோட அடையாளமா அள்ளிச் சேத்த பொக்கிசமா சம்பாதிச்ச காசுல தான் நானும் பள்ளிக்கூடம் முடிச்சேமுன்னு,

.

.

போட்டோல பாக்கும் போதே ஆயிரம் ஞாபகத்தை அள்ளிச் சேர்க்கும் எம் மண்ணின் அடையாளத்தை,

வீட்ட விட்டு வெளிய வர விடாம 

வைச்சிருந்த போதும் உழைச்சு 

குடும்பம் நடத்துன

நம்ம ஊரு மகளிரோட வாழ்க்கையை, மகனே நீ தெரிஞ்சுக்கணும் னு.



Comments

Popular Posts