பறவையே எங்கு இருக்கிறாய் - A memorable Fly
யுவன் + நா முத்துகுமார் + ராம் கூட்டணியின் இசைக்கும், கவிதைக்கும், பாடலின் கதை களத்திற்கும் ஆன பிணைப்பு மனதை இனம் புரியாத உனர்வுகளுக்குள் அழைத்துச் சென்று அனுபவத்தின் நினைவுகளை அசை போட வைத்து விட்டு, காதல் மட்டுமின்றி அதனோடு இணைந்த வாழ்வியல், நம்பிக்கை, ஏக்கம் , துள்ளல் என ஒவ்வொன்றையும் தட்டி கொடுத்து புத்துணர்வோடு வழி அனுப்பி வைக்கும் தோழமை அது. அதில் முதலில் அறிமுகம் ஆகி இன்னும் கேட்கும் போதெல்லாம் மனதை வருடும், பறவையே எங்கு இருக்கிறாய்? பற்றி எப்படி பதிவிடமால் இருந்தேன். முதல் முறையாக பறக்கும் பறவையின் உள்ளுணர்வை பாடல் வழியே விவரித்தால் இப்படி தான் இருக்குமோ என்பதில் ஆச்சரியம் துளியும் இல்லை. வாழ்வின் மீதான கடைசி நம்பிக்கையாக தன் காதலியிடம் (ஆனந்தி) இருந்து கிடைத்த முதல் கடிதத்தை பெற்ற காதலன்(பிரபா) வாசிக்கும் வசனங்களுடன் துவங்கும் பாடல். காதொலிப்பான் (Headphones) வழியே கேட்கும் போது இடது பக்கம் காதலனும், வலது பக்கம் காதலியும் வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது யுவனின் குறியீடு. பிரபா, நீ என்ன தேடி இருபன்னு எனக்கு தெரியும்… நானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா’ல ...









