தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

 



முன்னுரையில் வண்ணதாசன் சொல்வது போல் மாரி செல்வராசுக்கு தான் தெரிந்தார்களோ தாமிரபரணியில் கொல்லப்படாத இவர்கள்.


தான் கொண்ட அன்பிற்குத் தன் உயிரை துச்சம் என துறந்த முண்டனின் நண்பன் கதிரேசன், பிறப்பின் பயனால் பெற்றத ன் உடலை, நிறத்தை இயல்பில் அவமானப்படுத்தும் சமூகத்தின் நோக்கம் புரியாத பள்ளி தோழி செண்பகவள்ளி,அறிமுகம் ஆகி பரிச்சயம் ஆவதற்குள் தொலைந்து போன காதலுக்கு, காதலனின் பெயரை தன் மகனுக்கு வைத்துக்கொண்டு வாழும் அடுக்கு செம்பருத்தி பெண்,வார்த்தைகளிலும், வசனங்களிலும் சரி தன் சமூகத்தின் வட்டத்திற்குள் மட்டும் சமத்துவம் பேசிக் கொண்டு, மனிதம் அற்றுப் போன அப்பாத்துரை மாமா, சமூகத்தின் (மாஞ்சோலை தொழிலாளர்கள்) உரிமைக்காக தன் அன்றாடத்தின் விதிமுறைகள் தாண்டி போராட்ட களம் வந்து சேர்ந்த முகிலன், ராஜகிளி மாமா. வெளியில் செம்புல பெயல் நீர் போல தெரிந்தாலும், நான்கு சுவர்களுக்குள் வாழும் வாழ்வில் முரண்படும் மணிகண்டன் சாந்தி, காதல் பற்றி பேசும் போதெல்லாம் நினைவில் வரும் ஜோ, ஆண்மையின் வேதனைக்கு விலை போனா ஓவியன், தட்டான் பூச்சிகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் பால்யம் இவர்களுடன் வரும் வேம்படியா, சாம்போரையன், சுதா, வசந்தி, சிவபாண்டி, காமராசு - கோமதி, நொண்டி பெருமாள் தாத்தா என இவர்களை, இவர்களின் வாழ்கை மற்றும் சமூக நிலையை, சலனமின்றி கேட்டு கடந்து வரும் தாமிரபரணி நதியை போல கடந்து வர முடியவில்லை அவ்வளவு எளிதாக..

பெரும்பாலான கதைகள், கதைகள் தான் என எளிதில் கடந்து விட முடியாத படி, படித்து முடிக்கும் போதே கதை மாந்தர்கள் உடன் வந்து கேட்கும் கேள்விகளுக்கும், ஏதோ ஒரு இடத்தில் நாமும் கடந்து வந்திருக்கிறோமே இவன் போலவே, எதனால், எதற்காக, ஏன், எப்படி , என்று தோன்றும் சிந்தனைகளுக்கும்,

வாசித்து முடித்த பின் இதமாக கனக்கும் இதயமும், மௌனமும் தான் ஆறுதல்

...


Comments

Popular Posts