அடையாளம் இழந்த ஆணாக..1
அணிந்திருந்து களித்திருந்ததை விட
மகளுக்காக மகனுக்காக வென்று காத்திருந்ததே அதிகம்,
ஆசையாய் வாங்கிய அத்தனை ஆபரணங்களும்...
.
பெண்களும் ஆடைகளும்,
பெண்களும் ஆபரணங்களும், என சம்பிரதாய சொல்லாடல்களுக்குள் அடக்கி வைத்து விடுகின்றோம் அவ்வளவு எளிதாக..
.
புடவை அணிந்து வா அனைவரும் இருப்பார்க்கள் என தொடங்கி,
எதற்காக இவ்வளவு சிறிய ஆடை வேண்டாம் என்று,
எளிமையான கேள்விகளோடு தான் நிகழ்த்தப்படுகிறது அத்தனை பெரிய வன்முறைகளும்,
.
சிறியதோ பெரியதோ புடவையோ குட்டை பாவாடையோ அவர்களின் தேவைகளை தாண்டி புரிந்து விடவா போகின்றது? புரிந்திருந்தால் அத்தகைய தீர்வுகளுக்கும் தேவை இருந்திடவா போகின்றது?
.
கருத்துக்களும் விமர்சனங்களும் வைத்து விவாதிப்பதற்கு பொது வெளியில் அவர்களே முன்வைக்காத போது , முந்தி அடித்துக் கொண்டு முயற்சிப்பதில் அத்தனை ஆர்வம் நமக்குள் ஆணாக பிறந்து விட்டதால் என்னவோ?
.
இத்தனை பெரிய செலவுகளோடு இன்னும் வேண்டுமா, எதற்காக இந்த ஆபரணங்கள் மீதான மோகம் இன்னும்?
என்ற சிந்தனையின் கேள்விகளை தள்ளி வைத்து விட்டு ,
பெண்களால் /பெண் பிள்ளைகளால் இந்த சுமையையும் ஏற்க வேண்டுமே என்ற வெறுமையின் விளிம்பில் தான் இன்னும் நின்று கொண்டிருக்கிண்றோம்,
.
.
ஆம்
.
அணிந்து களித்திருந்ததை விட
மகளுக்காக்க மகனுகாக்க வென்று காத்திருந்ததே அதிகம் அந்த நகைகள் என அவள் சொல்லும் போது கூட ,
.
பொன் மீது மோகம் கொண்ட சமூகம் பீடித்திருக்கும் மன நோயிலிருந்து விடுபடாத வரை, பொன் உயர்வாகவும் அதற்காக தான் பெண் உயிராகவும் இருக்கின்றாள் என அடையாளம் இழந்த ஆணாக இதை பதிவிட மட்டுமே முடியும்...



Comments
Post a Comment