இருள் எது ஒளி எதுவோ!




Little mount ல இருந்து தாம்பரம் போற லோக்கல் train ல அவசர அவசரமா ஏறி உக்காந்துட்டு, bag ல வச்சிருந்த போன எடுத்து WhatsApp போகலாம்னு போன கை, திடிர்னு பக்கத்து seat ல உக்காந்திருந்த 3 பேர கவனிச்சதும் போன் எ தூக்கி bag ல போட்டு அவங்கள கவனிக்க வைச்சிருச்சு. அப்டி special ஆ யார்டா அவங்கனு கேட்டிங்க நா, visually challenged னு easy ஆ சொல்லிட்டு போயிற முடியாது? என்னா பார்வை இருந்துட்டு இல்லாம போனவங்கள வேணும்னா சொல்லிக்க முடியும் பார்வை இல்லாதவங்க னு, ஆனா இவங்க பார்வை னா என்னனு ஒரு விஷயத்தையே பெறாதவங்களாச்சே, அதான, எப்படி இல்லாத ஒண்ணா பத்தி வருத்தப்படறதுக்கு அவங்க என்ன சராசரி மக்கள் இல்ல தானே? First 5 நிமிசத்துக்கு குக்கூ படத்துக்குள்ள travel பன்ன மாதிரி தான் தோணுச்சு, அப்டியே அவங்க conversation அ கேக்க ஆரம்பிச்சி உடனே தான் மனசுக்குள்ள ஒரு கேள்வி எப்பிடிடா இவங்களால நம்மள மாதிரி இலை நம்மள விட சிறப்பாவே வாழ முடியுது னு? சரி விசயத்தை சொல்றேன் அவங்க 3 பேர் ல 2 பெரு ஒண்ணா இருந்தாங்க வயசு 3௦ இருக்கும் போல, 3 ஆவது ஆள பத்தி சொல்லியே ஆகணும் 40 வயசுல அவரோட அனுபவம் இருக்கே என்னடா AI, Sensing எல்லாம் னு கேக்க வச்சுருச்சு. அவங்க 2 பேரையும் அழைச்சுட்டு போக தான் வந்துருக்காரு போல அவரும், அவங்களுக்காக எடுத்த ticket கான காச அவங்க அவர் கிட்ட தந்தப்போ, எனக்கும் சரியாய் தெரியல எத்தனை ரூபா note னு என் னா இப்போதான் வானவில்லோட எல்லா கலர் லயும் ரூபா நோட் வந்துருச்சே digital இந்தியா வுல.

சரி அது போட்டும் ஆனா அந்த மனுஷன் ருபா note ஓட corner side அ 2 second தடவி பாத்துட்டு என்னடா புது note எல்லாம் நெறைய வச்சுருக்க போல 200 ரூபாய தாராளமா நீட்றியே டா, இந்த இத நீயே வச்சுக்கோ னு அவங்களோட பாக்கெட் லையே வச்சி விட்டாரு. அப்புறம் அவர் சொன்ன வார்த்தைகள் இருக்கே, என்னப்பா இந்த காசையும் கடனா நெனச்சி உன்ன பெரியவனாக்கி என்ன சின்னவனை ஆக்குறதா.. இந்த உதவிய கூட செய்ய முடியாத அளவுக்கு கடவுள் ஒன்னும் எனக்கு குற வைக்கலபா, என்ன பெரிய காசு செலவு ஆகிருச்சு இதுல, காசு வரும்பா நாளைக்கே, இந்த நாள கடவுள் நல்ல தெம்பா குடுத்து சந்தோசமா கடந்து வர வழிய குடுத்துருக்கும் போது, நாளைக்கு நல்லதாவே அமையும்... பேசி முடிச்சிட்டு pocket ல இருந்த smart phone அ எடுத்து use பண்ண விதமும், station என்னனு எப்போ தாம்பரம் வரும் எந்த station கு அப்றமா வரும்னு நான் முழிச்சிகிட்டு தான் இருந்தேன், அவரோ தாம்பரத்துக்கு 2 station கு முன்னாடி station வந்தப்போ
அதனோட name ஐயும் சொல்லி next கு next தாம்பரம் தான் பாகனு சொன்னதும் எதுக்குடா இந்த gmap smartphone னு யோசிக்கவே செஞ்சுட்டேன்...

ஒரு வழிய தாம்பரம் வந்ததும் அவங்களும் இறங்கி போற வழியிலேயே நின்னு பாத்துட்டு, கண் இருந்தும் யாரையும் கண்டுக்காம பக்கத்துல உக்காந்துட்டு போனவங்களையும், அப்டி ஒரு வரம் வாங்காம வந்துட்டோமே னு கொஞ்சம் கூட கவலை படமா சிரிக்கிறவங்களையும் பாத்துட்டு எப்படி இப்டி கடவுளோட design nu?

குக்கூ படத்தோட வசனத்துல இருட்டாவே தெரியுமா பா எப்பயும்? னு ஹீரோ தினேஷ் கிட்ட கேட்குறப்ப,
இருட்டுனா என்ன சார்? எப்படி இருக்கும் னு? அவர் சொல்ற பதில் மாதிரி தான் அவங்களோட வாழ்க்கையும், தன்னம்பிக்கையும், தன் வாழ்க்கையின் மீதான வைராக்கியமும், அதுக்கான அவங்களோட அர்ப்பணிப்பும் கூடவே இருக்கும் பொது இருள் என்ன? வெளிச்சம் என்ன?
எல்லாமே நல்ல இடம் தானே...
கண் இருந்தும் நாம காணாத பல விஷயங்களை பாக்குற அவங்களோட நம்பிக்கையும் விடா முயற்சியும் கொஞ்சம் வாங்கிக்கத்தான் செய்யணும் னு நெனைக்க வச்ச அவங்கள பத்தி எப்படி எழுதாம இருக்க முடியும்?

இருள் எது ஒளி எதுவோ? கொண்ட உணர்வுகள் உணர்ந்து தொட... உருவெது வடிவெதுவோ?
இரு இருதயம் கலந்து விட...
எப்புடி ஒரு புரிதல் அந்த உறவுல?
எப்படி வந்துருக்கும் அந்த காதல் தன் துணைவியின் மேல? எத பாத்து வந்திருக்கும்? எத எதிர்பார்த்து வாழ்ந்திருக்கும் அந்த காதல் னு
விடை தெரியாத கேள்விகள் 100...

பதில் என்ன வோ அவங்க வாழ்ற வாழ்க்கையிலயும், அவங்களோட மன தைரியத்துலயும் தான் இருக்குமோ? கொஞ்சம் நாமளும் வாங்கிக்கனும் போல, அவசியமா தேவ படும் வாழ்க்கையில நமக்கும்...
வாழ்க்கையை விட முக்கியமா வேற ஒன்னும் இல்ல வாழ்றதுக்கு னு புரிந்து கொள்ளவே....

நினைவில் நீங்காதவை..

Comments

Popular Posts