தமிழுக்கும் சுவையுண்டு
இன்னும் ஏன்டா தமிழை கட்டிக் கிட்டு அழுவுத, தமிழ் தமிழ் னு சுத்திட்டு திரியுறதுக்கு பதிலா ஆங்கிலத்துல படிச்சாவாவது நல்ல வேலை கிடைக்கும் நாலு காசு சம்பாதிக்கலாம் னு சொல்லுற நிலமைக்கு நம்ம தலைமுறை வந்துருச்சனு சொல்றதுல எதிர்பு தெரிவிக்க பெருசா காரணங்கள் இல்லாமதான் போயிருது..
சொந்த ஊரே இந்த நிலமைக்கு மாறி போயிருச்சுன்னா, இதுல தம்பி இந்தி படிச்சனா மத்திய சர்க்கார் உத்தியோகத்துக்கு உதவியா இருக்கும் னு ஒரு கூட்டம் ஓய்வே இல்லாம கூவிட்டு இருக்காணுவ,
இப்போ ஒரு படி மேலே போய் மவனே நீ இந்தி படிச்சா தான் டா வாழ முடியும் இந்தியால னு இந்தியாவுக்கு புதுசா ஒரு அடையாளத்தை வாங்கி குடுக்கணும் னு துடியா துடிக்கிறானுவ..
சரி விஷயத்துக்கு வருவோம், என்னதான் இவங்க இப்படி சொன்னாலும் தொண்ணுறுகளின் தலைமுறைக்கும் அதுக்கு முன்னாடி இருந்த தலைமுறைக்கும் தமிழ் மேல இருந்த பிடிப்பு இப்போ இருக்குற தலைமுறை கிட்ட குறைஞ்சிக்கிட்டு தான் வருது,
எங்க இவங்க தமிழ மறந்து போனாலும் போயிருவாங்களோ இன்னும் 100 வருஷத்துல ஒரு பயம் லேசா எட்டி பாக்கத்தான் செய்து அடி மனசுக்குள்ள அப்படி ஆனாலும் ஆச்சரியபடறதுக்கு அவசியமும் இருக்காது?
எப்படி இப்படி சொல்றனு கேட்டீங்கனா ஆமா முன்னால பிள்ளையார் சதுர்த்தி-கு ஐந்து கரத்ததனை னு பதிவு போட்ட பயலுவல்லாம் இன்னைக்கு கணபதி பாபா மோரியா னு போட ஆரம்பிச்சத பாத்தப்பத்தான் அந்த படபடப்பு லேசா.
உடம்புல இத்தனை ஓட்டைகள் இருந்து எப்படி என்னுள் நுழைந்தாய் என்னுள் நிரம்பி கிடக்கின்றாய் என் தமிழே னு வைரமுத்து சொன்னத உணராமத் தான் இருக்காங்களோ? இந்த தலைமுறை..
இல்ல, கெத்து னு சொல்லிக்கிட்டு இங்லிஷ் பாடலையும், இங்கிலிஷ் கவிதைகளையும் பதிவிடுவதை, வழக்கமாவும், ஸ்டைலிஷ் வாழ்க்கையின் அங்கமாவும் எப்படி உள் வாங்கி போனாங்களோ? அதுக்காக என்னடா இவன் அத தப்பு சொல்ல வந்துட்டான்னு கேள்வி கேக்கிறது கேக்குது எனக்கும்,
இங்க பிரச்னை அத பதிவிடுவதோடு முடியுறது இலை,
கலாச்சாரத்தின் அடையாளமாய் வாழ்வின் விழுமியங்களை வசிகரித்து வைத்திருந்த தமிழை தமிழ் மொழியில் பதிவுகளை பகிர்வது ஏதோ கௌரவ குறைச்சலா மத்தவங்க நெனச்சுப்பங்களோ னு பல பேரை யோசிக்க வச்சதுல தொடங்குது இந்த பிரச்சனை,
உதாரணத்தோட சொல்லனும்னா , ஹேப்பி பர்த் டே னு ஆங்கிலத்தை தமிழ் ல சொல்ல வெக்க படாத மானம், pirantha naal vazhthukkal னு அங்கிலத்துக்குள்ள தமிழ வச்சு தைரியமா புதைக்குறதுக்கு சுதந்திரம் வாங்கி குடுத்துருச்சு...
ஆக நா தமிழ் ல பேசணும் பதிவுடனும்னு தமிழ் தியாகி போராட்டம் நடத்தி இருக்குறவங்களுக்கு மத்தியில நானும் ஏமாத்த வரல...
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்..னு
பாரதி தாசன எழுத வச்சிருக்குன்னா சாதாரண மொழியா இது இருந்திருக்க முடியுமா?அவ்வளவு எளிமையா இத நாம கடந்திட முடியுமா? இந்த கேள்விக்கு பதில் சொல்ல வந்த செந்தமிழ் கடலின் முதல் அலையிலையே மூழ்கி போனவனா தான் இந்த பதிவை எழுதுறேன்...
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தானம் ஆகலின், - மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றனார்
(பொருள்-எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே, நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமை யில்லை, வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை,வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை, பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம், ஆதலினால்,பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை,பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை..)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய், இவ்வளவு எளிமையாய்
எவ்வளவு பெரிய கருத்துக்களை
நம்மக்களின் வாழ்வியலை
வார்த்தெடுத்து கொடுத்த தமிழை
உணராமல் போவதும் பேசுவதும்,
இரவின் நடுவில் தூக்கத்தை தொலைத்தவனுக்கு தூங்க கொடுத்த வரத்தை எப்படி உபயோகப்படுத்துவது என்று தூங்காமல் யோசித்தவனின் கதையை போல,
எப்படி புதுமையாகி வளர்ச்சியின் தாராள வடிவமாகிப் போகும்?
பிறந்து வாழ்வோர் அனைவரும் ஒன்றென உடன்படும் தமிழன் உயர்வு தாழ்வுக்கு உயிர் கொடுப்பானா?
-தொடர்வோம் தமிழ் கடலின் தேடல்களோடும் சில பதிவுகளோடும்...



Comments
Post a Comment