பனையன் மகனே. பார் புகழும் பாரி வேளே.
பனையன் மகனே...
பறம்பின் தலைவனே...
கருணையால் தோய்ந்த மாபெரும் கடலே,
காதலால் மணந்த குறிஞ்சியின் மலரே,
வீரத்தால் உனை வெல்ல ஒருவரும் இலரே...
.
பெரும்படை கொள்வான்
பகை கொள்வான்
முடியுடை செய்வான்
முரசமும் செய்வான்
புகழ்பட வாழ பெருமையின்
வழி சேர போரும் செய்வான்
மன்னன்...
.
மலையென கொள்வான்
கொடையையும்,
உயிரென நேசிப்பான்
இயற்கையையும்,
கலையென வகுப்பான்
வாழ்வியலையும்,
தாயென காப்பான்
குடிகளையும்.
தலைவன்....
.
பறம்பின் தலைவனே,
பார் புகழும் பாரி வேளே...
நின் வீரத்திற்கு மலைகளே சாட்சி,
நின் கொடைக்கு இயற்கையே சாட்சி,
நின் கருணைக்கு பொழியும் மழையே சாட்சி,
நின் புகழின் பெருமைக்கு
இப்பொழுதும் உன் பெயர் உரைப்பதே சாட்சி.
.
தமிழ்குலத்தின் அடையாளமாய்
நீ இருப்பதே மாட்சி.
.
பனையன் மகனே,
பார்புகழும் பாரி வேளே..



Comments
Post a Comment