சிறகுகள் பறப்பதற்க்கே
நிழல் தேடி தகித்து போன வெயிலின்
வெஞ்சூட்டினை வசை பாடி ஏசி தீர்க்க ஏராளமாய் வார்த்தைகள் வந்த போதும்
3 மணிக்கான நேர்காணலை நினைத்து
விறு விறு வென்றே வெறித்து பார்த்து கொண்டே நடந்தேன் OMR இன் வீதியை..
.
சட்டென செவிகளில் வந்து வீழ்ந்தது பின்னால் இருந்து வந்த
"Hello தினேஷ்..hello ஒரு நிமிஷம் ங்க.. ஏங்க. தினேஷ் நீங்க தானே" விழிப்பின் அழைப்புகள், "என்னங்க உங்க file
அ இருந்து miss ஆகி விழுந்துருச்சுங்க இந்த certificate.." certficate விழுந்த வியப்பின் ஆழத்தை விட அதிகம் இறங்கியிருந்தது அந்த முகக்கவசம் அணிந்திருந்த முகத்தின் கரு விழிகள் கூர் ஆயதங்களாக.. எங்கயோ பார்த்த முகங்களில் ஏதோ ஒன்றாக இது இருக்குமோ என 100 முறை ஒப்பீடு செய்திருப்பேன் அந்த அரை கணத்திற்குள்.. "thanks nga கவனிக்கவே இல்ல விழுந்தது கூட ஞாபகம் இல்ல time vera 2 ஆகிருச்சு அந்த அவசருத்துல miss பண்ணிட்டேன் interview 3 மணிக்கு 2.30 க்கு attend ஆகனும்...ஏங்க அப்டியே ஒரு சின்ன help நீங்க அந்த வழியதானே போறீங்க கொஞ்சம் drop பன்னிடுங்களேன் please "
.
அதிகம் யோசிக்க முயற்சிக்காதவளாய் "சரி வாங்க போலாம் " சட்டென பதில் கொடுத்து பைக்கில் ஏற்றி கொண்டாள்.
கண்ணாடியில் அவளை நானும் என்னை அவளும் பார்கிறோமா என பலமுறை பார்த்து கொண்டதில் இருவரும் பார்த்துக் கொண்டோம் பல முறைகள். மௌனத்தை கலைக்க வார்த்தைளை நான் தேட, "bike driving புடிக்குமா உங்களுக்கு?" என அவளிடம் இருந்து வந்தது கேள்வி விடையாக, என்னங்க இப்புடி கேட்டிங்க அதெல்லாம் இல்லாமலா பசங்க இருப்பாங்க..! (ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கேட்டிருந்தால் பதில் வேறாகத்தான் இருந்திருக்கும், petrol போட முடியாமதான்
Bike அ விட்டுட்டு bus காக வந்தேன் னு நினைக்கும் போது)
.
அவளே தொடர்ந்தாள், "என் கனவுங்க bike... எங்க ஊர்ல எங்க அம்மா தலை முறைக்கும் சரி, ஏன் என் தலைமுறைக்கும் சரி எங்க ஊரு தான் உலகம்...ஆனா எங்கப்பா மட்டும் bullet வச்சு ஊரெல்லாம் சுத்துவாரு.. எங்கம்மா ''
"போற வழியில என்னை பஸ் ஸ்டாப்ல விட்டுட்டுப் போயிடுங்களேன்; கோயிலுக்குக் கூட்டிட்டுப் போங்களேன்; மார்க்கெட் வரைக்கும் விட்டுட முடியுமா, வெளில கூட்டிட்டு பொங்களேன் னு கெஞ்சாத நாளுமில்லை..சலிப்போடு கூட்டு போவாறே சந்தோசமா போன நாளுமில்ல"
.
ஆனா எனக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கு ல, நினைச்ச நேரம் நெனச்ச இடத்துக்கு போக முடியுது, alone rode ride, night time beach, கோவில், அவசரத்துக்கு hospital னு
எங்கையும் போறதுக்கு ஒரு
ஆணைச் சார்ந்திருக்கனும்ம் ங்கிற கட்டாயத்துல இருந்தும் , அவங்களோட சலிப்பில இருந்தும் எங்கள பெருமளவு மீட்டெடுத்த பெருமை இந்த டூ வீலருக்கு இருக்கு ல...
"என்னங்க எங்கள பொறுத்த வரைக்கும் வண்டி ங்கிறது தூரத்தை கடக்க நேரத்தை மிச்ச படுத்த ஒரு வாகனம் அவ்ளோதாங்க அதும் இயல்பாவே ஒரு வயசுல கிடைச்சிருது ங்க உங்களுக்கு பின்னால ஒரு வரலாறே இருக்கும் போலையே"
"ஆமாங்க வரலாற லேசுல கடந்து போகுற வெறும் சேதியா மாத்தி வச்சதால தாங்க நாமெல்லாம் நமக்கான உணர்வுகளை மறந்தவங்களா இருக்கோம் பல விஷயத்துல,
"ஆனா எங்கள பொறுத்த வரைக்கும் இன்னும் இரண்டு கால்கள் கூடுதலாக, இல்ல இல்ல கனவை நோக்கி எங்கள பறக்க வைக்கிற இரண்டு றெக்கைகள் ங்க இந்த two wheeler"
இத ஓட்றப்போ ஏதோ ஒரு தன்னம்பிக்கை உற்சாகம், உலகம் நம்ம ஊரு மட்டும் இல்ல அத தாண்டியும் இருக்குனும் தூரமும் நேரமும் தடையில்ல பெண்மையும் பாரமில்லை னு பல உணர்வுகள் ஓடும் ங்க மனசுக்குள்ள, வளைவுல திரும்பி முன்னேறி போகையில எதிர்காற்று முகத்தில் தழுவி செல்லும் போதெல்லாம்"
"ரொம்பவே நன்றி சொல்லணும் ங்க பெண்களுக்குனு பிரத்யேகமா two wheeler கண்டுபுடிச்சவனுக்கு, அவன் வெறும் வண்டிய மட்டும் கண்டு புடிக்கலைங்க, ஒரு தலைமுறை பெண்களின் வாழ்க்கையையே மாத்தி அமைச்சிருக்கான் ல.." '
.
சரிங்க boss tidel வந்துருச்சு,15 நிமிசத்துக்கு முன்னலையே வந்துட்டீங்க, நல்லா பண்ணுங்க interview" னு சொல்லிட்டு பதிலை எதிர்பாராதவளாய் கிளம்பினாள், தன்னம்பிக்கை ஒளி முகமெங்கும் வீச ..
.
சாலையின் வாகனம் மறையும் தொலைவு வரை பார்த்தேன், மறைந்த பின்பும் பார்த்து கொண்டிருந்தேன்.
வார்த்தைகள் ஏதும் வசப்படாதவனாய், 'அவளிடம் இருப்பது
இரண்டு சக்கரங்களும் இன்ஜினும் கொண்ட வெறும் வண்டி அல்ல, அது இறக்கைகள். அவை நகர்வதற்கானது அல்ல; பறப்பதற்கானது!" என எண்ணி கொண்டே அரங்கிற்குள் நுழைந்தேன்.
.
பல சமயங்களில் திட்டமிடாமல் நடக்கும் நிகழ்வுகளே அதிகம் சுவாரசியம் நிறைக்கின்றன எதார்தங்களின் அனுபவங்களோடு...
(பெண் விடுதலையில், எந்தச் சித்தாந்தங்களையும் போராட்டங்களையும்விட மகத்தான பங்கு ஸ்கூட்டிக்கு உண்டு. ஐந்து கிலோமீட்டருக்கு அப்பாலும் உலகம் இருக்கிறது என அதன் சக்கரங்கள்தான் பெண்களுக்கு உணர்த்தின...



Comments
Post a Comment