வாக்காள பெருமக்களே, வாக்களிக்க பெறும் மக்களாக இருந்து விடாதீர்கள்...

அன்பான வாக்காளர்களே!


உங்கள் வீட்டு பிள்ளை என்பார்,
உங்களில் ஒருவர் என்பார்,
பொற்பாதம் தொட்டு கூட கேட்பார்,
இந்த தேர்தல் மழைக்கு முளைத்த
திடீர் காளான்கள்...

தரமான சாலையை
இல்லை இல்லை
மழை பெய்தால்
தண்ணீர் குளங்களா
மாறிப்போன சாலையை
சீரமைக்காத,

சுதந்திரம் வாங்கி 70
ஆண்டுகள் கடந்தும்,
இன்றும் மேல்நிலை
பள்ளிக்கு பல மைல்கள்
சைக்கிள் பயணம் செய்யும்,
தேர்வுகளின் பயிற்சிக்கு
தனியார் பயிற்சி மையம் செல்லும்,
நம் பிள்ளைகளின்
பாரம் குறைக்காத,

தரமான மருத்துவ
வசதியை உறுதி செய்யாத,
இல்லை இல்லை,
அவசர உதவிக்கான
மருத்துவத்திற்கும்
அரை மணி நேரம் பயணிக்கும்,
அவல நிலையை அகற்றாத

கல்லூரி படிப்பை
கடந்த இளைஞர்களின்
ஏதிர்காலம் பிடிப்பின்றி
பெற்ற படிப்பின் மீது
வெறுப்பை விளைவித்த
வேலைவாய்ப்பின்மைக்கு
விடைதேடாத,
அவர்களின் விளையாட்டு,
கலை திறமைகளை
வளர்த்தெடுக்கும் களத்தை
ஏற்படுத்தாத,

வேட்பாளர்களுக்குத் தான்,
நாம் இத்தனை முறை
வாக்களித்தோம்,
சரியாக சொன்னால்
வாக்குகளை விற்றோம்.
சுயமரியாதையையும்
உரிமையையும்
அதற்க்காக விற்க்கும்,
பொறுப்பற்ற அயோக்யதனத்திற்கு
'யார் வந்தால் என்ன' என்று சமாதான சாக்கு வேறு...


வாங்கிய பணத்திற்கு
விசுவாசியாக வாக்களிக்கும் நமக்கு
விலைவாசி ஏற்றம் குறித்து
குறை கூற என்ன தகுதியோ?

நாம் விரும்பும் மாற்றமாக
நாம் மாறாத வரை,
நம் உரிமைக்கும்
சுயமரியாதைக்கும்
விலைபோவதல்ல தீர்வு
என்பதை உணராத வரை,
எதுவும் மாறாது என்று
சொல்லி சமாளித்து
விட முடியாது இனி,
எல்லாம் மாறும்,
மாற்றங்கள் எல்லாம்
பாரமாய் மாறும்,
பாரங்கள் வாழ்வை
கடினமாக்கும்...


தீர்வென்றால்,
சந்தித்து  வாக்கு கேட்பவன்,
சந்திக்க வருவனா
குறை கேட்க மீண்டும்?
தெரிந்தவன், குடும்பத்தான்,
சாதிக்காரன், ஊர்க்காரன்,
என்ற அடையாளங்களுக்கு
அப்பாற்பட்டவனாய்,
சமூகத்தின் மாற்றத்திற்கு
இவன் செய்த மாற்றமென்ன?
செய்ய போகும் மாற்றத்திற்கு
இவன் பெற்ற அறிவின்
அனுபவம் என்ன?
சிந்தித்து வாக்களிப்போம்..


இது வாக்களிக்க மட்டுமே,
மக்களின் பங்களிப்பு குறித்து பிறகு பார்ப்போம்.

இறுதியாக,
எனதருமை,
வாக்காள பெருமக்களே,
வாக்களிக்க பெறும்
மக்களாக இருந்து விடாதீர்கள்...

Comments

Popular Posts