எனக்கு பிடித்த அவளோ
அவளைப் பிடிக்க காரணம் என்ன என்று கேட்கிறாள்,
கடினமான சூழ்நிலையில் இருந்த போதும் ஆறுதல் வார்த்தைகளை எடுத்து வரும் உரையாடல்கள் என்று சொல்லவா,
தனக்கான தேடலை தேடி அடைய துடிக்கும் பழக்கங்கள் என்று சொல்லவா, தனக்கான அடையாளத்தை சமரசம் செய்ய முன்வராத கண்ணியம் என்று சொல்லவா, அறிமுகம் இல்லாதவரின் இயலாமைக்கு உதவ துடிக்கும் கருணை என்று சொல்லவா, அவர்களின் காயங்களுக்கு வருந்தும் இரக்கம் என்று சொல்லவா, சக மனிதர்களை அன்புடன் அணுகும் தோழமை என்று சொல்லவா, தன்னுடையது அல்லாத காரணங்களால் தனக்கு ஏற்படும் மாற்றங்கள் கொண்டு பிறக்கும் கோபம் என்று சொல்லவா, கடினமான வார்த்தைகளால் வருத்தம் காட்டாத மனிதம் பற்றி சொல்லவா, மனிதர்களை தாண்டிய உயிர்களிடத்தில் கொண்ட பிரியம் என்று சொல்லவா, உறவுகளின் உணர்வுகளை அங்கீகரிக்கும் பாசம் என்று சொல்லவா, பெற்றோரின் மான்பின் மீது கொண்ட அன்பை சொல்லவா, இன்னும் நீளும் இந்த பட்டியலில், ஏராளம் வந்து சேரும் தொடரும் காலங்களில் அவளை ஏன் பிடித்தது என்ற கேள்விக்கு.
.
வெறும் பதில்களாக இவற்றை வாசிக்கும் போதே பிடித்து போகும் எவர் ஒருவருக்கும் என்கின்ற போது, அதன் அனுபவத்தை உணர்ந்தவனுக்கு பிடிக்காமல் போக ஏதேனும் காரணம் வேண்டுமா என்ன?



Comments
Post a Comment