மீண்டும் ஒரு முறை?

 


நினைப்போமா? மறக்காமல் இருப்போமா? என்ற அர்த்தமில்லா கேள்விகள் சந்தேகத்தின் மத்தியில் துளைத்து எடுத்த போதும், மீண்டும் அறியாது ஒரு முறை போய் வந்து விட மாட்டேனோ உந்தன் நினைவுக்குள்? 

சலனங்கள் ஏதுமின்றி அறிமுகம் ஆக கதைத்த அந்த உரையாடல்களுக்குள்  சென்று தவறிய சில நிகழ்வுகளை பேசி வந்து விடுவோமா?

வாழ்க்கையை காட்டி, வலிகளை மறைத்து,மகிழ்ச்சியை மனதொடு புதைத்து வைத்திருந்த பயணத்தினை, அந்த கவலை அறியா பயணத்தினை மீண்டும் ஒரு முறை போய் வந்து விடுவோமா?

எத்தனை கோவங்கள் எத்தனை வருந்தங்கள்அத்தனையிலும் இதயம் தொட்ட உறவை மீண்டும் ஒரு முறை சந்தித்து பேசி விட மாட்டோமா? என ஏக்கங்கள் தான் எத்தனை?

புரிந்து கொள்ளாமல் பிறந்ததா என்ன? பிரிந்து கொள்ள பிறக்காத சிந்தனை போதாதா  வாழ்நாள் வரை உடன்வர, என புரிந்து கொள்வோமா மீண்டும் ஒரு முறை?

மனம் தினம் தினம் நினைக்க இடம் கொடுத்தாலும், கடந்து போவது தான் வாழ்க்கை என ஏற்றுக்கொண்டாலும் கூட,நினைவுகளைஅள்ளிக் கொடுத்தவர்கள்அருகில் இருந்தால் என்னதொலைவில் இருந்தால் என்ன நினைவில் தினம் வர தவறுவதில்லை என்ற உண்மையை உணர்த்திய நேரங்களை செய்வோமா மீண்டும் ஒரு முறை?

முன்னோக்கிய ரயில் பயணத்தில், பின்நோக்கி மரங்கள் பயணிப்பது போல, மாயை தான் நினைவுகளை தேடிச் செல்வதும், வலியை மட்டுமகொடுத்த பொதும் சுகம் தான் என்றும்,நினைவுகள் என்றாவது ஒரு நாள் நிஜம் ஆகும் என நம்பும் இதயத்திற்கு ஆறுதல் சொல்லவாவது ஒரு முறை அறிமுகம் ஆவோமா மறுமுறை?

வருவாயானல் காத்திருக்கும் மனம் நம்பிக்கையின் கரம் பிடித்துக்கொண்டு, வராமல் போனால் மாலை நேரத்தின் மயக்கம் தான் நம்  சிநேகம் என நினைத்துக்கொண்டு, விழியின் ஈரத்தையும் துடைத்துக் கொண்டு ஓடவேண்டியது தான், நிற்கவும் நேரம் இல்லாமல் போன வேலைகளை கவனிக்க.

ஆனால், எந்திக்கொள்ள மனமில்லாத கரையிடம் கதைக்க போராடும் அலைகள் சலித்து விடுமா என்ன அதன் முயற்சியில்? 


Comments

Popular Posts