நான் என்பது யாரோ பெருந்திரளினிலே
எங்கிருந்தோ பிரபஞ்சம் ஏதோ ஒன்றினை அறிமுகம் செய்து தொலைந்த எனை மீட்டெடுத்து, அடுத்த நிமிடத்திற்குள் அழைத்துச் செல்ல தவறாத வாய்ப்பினை வரமாக பெற என்ன பாக்கியம் செய்தேனோ?
எப்போதும் தனிமையை ரசிக்க, அனுபவிக்க 96 ன் " life of Ram" பாடலை மனம் தேட தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் இன்னும் இன்னும் என ஆழ் கடலின் அடி ஆழத்திற்கும், ஆகாயத்தின் எல்லைக்கும், என எத்தனை எத்தனை நிகழ்வுகள் கவனிப்பின்றி உனக்காக என்று, அள்ளித் அன்பால் அனைத்து காதலி என தலை கோதி தேற்றி விடும் இசையல்லவா அது.. பாடல் முடியும் போதெல்லம் மனம் இன்னும் சில பல்லவிகள் வராதா என ஏங்கி, ஏக்கத்தின் விளிம்பில் கார்த்திக் நேத்தாவின் கைகளை பிடித்து இந்த பாடலுக்கு நீங்கள் எழுதிய rough draft காகிதங்களை யாவது கொடுங்கள் என கேட்டு வாங்கி வந்து விட வேண்டும் என்று துடித்ததை தலையணை மட்டுமே அறியும்..
இன்று அது கிடைத்த பெரு மகிழ்வை உணர்ந்ததோ மனம், "Journey" from Jaanu பாடலில். உடைந்து கிடந்த எனை ஒட்ட வைத்து வைத்தியம் செய்த மருந்துகள் என்று தான் சொல்ல வேண்டும் பின்வரும் சில வரிகளை.
"நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..
தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்.
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
.
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவீழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்..”
இறுதியாக,
வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய் ஆகிறேன்.
தனிமையை கடக்க அல்ல, ரசிக்க அனுபவிக்க அவசியம் உதவும் இந்த அதிசய வரிகள்.
https://open.spotify.com/track/1z0lXDoPdmTzy0mUFrmB5F?si=q36Od4WuQSGnGrdgsoQL0Q&utm_source=copy-link
Love you @karthiknetha_official ...



Comments
Post a Comment