உரையாடல் - 1


குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தானா? இல்லை மனிதன் இன்னும் குரங்காகத் தான் வாழ்கின்றனா? என்ற சந்தேகம் குறித்து விவாதிக்கவும், யோசிக்கவும் நண்பர்கள் உங்களுக்கு இருப்பார்கள் எனில் பாக்கியசாலிகள் தான் நீங்கள். அப்படி ஒரு உரையாடல் நிகழ்த்தும் தோழமை, சிந்திக்க சொல்லி நினைவு படுத்தவும், கவனிப்பின்றி என்னுள் கிடந்த உணர்வுகளை அறிமுகப்படுத்தவும் அவசியம்  என்றே உணர்கிறேன்.

அப்படி வாய்த்த  நட்புடன் நிகழ்ந்த உரையாடல் இந்த பதிவு..

வாழ்வில் பெற்ற சூழ்நிலைகளின் அனுபவங்களின் பயனால், நான் என்ற அடையாளத்தை துறக்க போராடிக் கொண்டிருக்கிறேன் நான் என்றேன்.

Q: நான் என்று எதைச் சொல்கிறாய்? அவளின் கேள்வி.

A: "தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே.. கூவி வாவென்றொரு வாழ்க்கை"   இதற்காகத் தான் என்ற பதில் என்னிடம் இருந்து. கூடவே என்னோட identity அப்டி இருக்கட்டுமே னு ஒரு சமாளிப்பு.

Q:நான் என்றால், நீ என்ன நினைக்கிறாய்? இது என்னுடைய கேள்வி?

A: அவளின் பதில், Identity ஒன்னு வேணும் னு நினைக்கிறது தான் நம்முடைய முட்டாள்தனம்.நம்முடைய எண்ணங்கள் தான் நம்முடைய அடையாளம் னு  நாம நினைக்கிறோம். உன்னுடைய  எண்ணங்களை நீ கட்டுப்படுத்த முடியும் அப்டிங்ற போது, அது எப்படி உன்னுடைய அடையாளமாக இருக்க முடியும். அது ஒரு தேடல் அல்லது எதிர்பார்ப்பு சார்ந்து சில விசயங்களை கேட்கும், அத பத்தி யோசிக்கும், அதுக்காக சில பழக்கங்களை ஏற்படுத்தும், அது கிடைக்கும்போது அல்லது நடக்கும் போது ரொம்ப சந்தோசப்படும், கிடைக்காத, நடக்காத போது வருத்தப்படும். அதனாலே நம்ம எண்ணங்கள் தான் நான் என்று நம்மை சொல்ல வைக்கின்றது.   உண்மையில் அது நாம கிடையாது னு நான் நினைக்கிறேன்.

So the point is, நான் என்பதை கடந்து நீ என்ன நினைக்கிற, என்ன பேசுற, அதுக்கு எப்டி நடந்துக்குற, இது எல்லாமே ஒரே மாதிரி ஒரே sync la இருக்குதா என்பது தான் விசயமே, இதை எல்லாம் தாண்டி, அந்த 3 விசயங்களிலும் அறம் இருக்குதா என்பதும் ரொம்ப முக்கியம். இன்னும் தெளிவா சொல்லணும் னா உன்னுடைய செயல்கள் வழியாகத் தான் உன்னை மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் நான் நம்புகின்றேன் என்பது அவளின் பதில்.

Q: சரி இங்க நாம என்னதான் நாம, நாமளா இருக்கணும்னு நினைச்சாலும் நாம நம்மளோட சிந்தனையை செயல்களை சுதந்திரமா செய்ய முடியக் கூடிய சூழ்நிலையில இல்ல அப்படிங்கறது எதார்த்தம் தானே, உதாரணமாக ஆபீஸ்ல worker ஆ இருக்கிற நாம், வீட்டுக்கு போனா அம்மாக்கு பையனா,தங்கச்சிக்கு அண்ணனா, சமுதாயத்துக்கு ஒரு நல்ல குடிமகனா, நல்ல நண்பனா,நல்ல உறவினரா, நல்ல துணையா என பல பொறுப்புகள் ஏற்க வேண்டிய நிலையில் தான் உள்ளோம். இங்க நாம எடுக்கிற ஒவ்வொரு முடிவும் அல்லது விஷயமும் அவங்களையும் சார்ந்து தான் அல்லது அவங்களையும் கருத்தில் கொண்டு தான் எடுக்கணும், அப்படிங்கறது நிதர்சனம் தானே, இங்க தான் நம்மளுடைய எண்ணங்களும் செயல்களும் அதற்கு ஒத்துப் போகாத போது பிரச்சனைகளும் சவால்களும் சந்திக்க வேண்டி இருக்கு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எப்படிப்பட்ட சோகம் வருத்தம், வந்தாலும் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்குற, அலட்டல் இல்லாத அன்பு, ஏளனம் இல்லாத அக்கறை, இறுமாப்பு இல்லாத பாசம், எதிர்பார்ப்பு இல்லாத உதவி, சுயநலம் தேடாத ஆறுதல், அப்படின்னு அறத்தோட வாழ நினைக்கிற ஒரு வாழ்க்கை வாழ விரும்பும் நான் எப்படி சாத்தியம்? என்னுடைய கேள்வி.

A: Yes correct, உனக்குள்ள ஒருத்தன் நீ என்ன நினைக்கிற அப்படின்னு யோசிக்கிறான் இல்ல, அவன் தான் நீ, தியானம் பண்ணும்போது தெரியும்னு சொல்லுவாங்க, எண்ணங்கள் நல்லதோ, கெட்டதோ மனதில் அலையா அடிச்சுக்கிட்டு இருந்தாலும், அமைதியா உணக்குள்ள  ஒரு மனம் அதை கவனித்துக் கொண்டே இருக்கும். எந்த விதமான பதில்வினையும் செய்யாமல் கவனித்துக் கொண்டே இருக்கும்.  அதுதான் நாம  அப்படி னு நினைக்கிறேன். அதுக்கு பெயர் இல்ல,அடையாளம் இல்ல, ஊரு இல்ல வருத்தமில்லை,பொறுப்பில்லை வரையறை இல்லை, வரைமுறை இல்லை.  அது அது தான், அதை புரிஞ்சுக்கிறது தான் இந்த வாழ்க்கை.

என்னதான் இங்க உனக்கு நிறைய roles and commitmens  இருந்தாலும் இங்க நீ, நீ தான் இல்லையா, அங்க உனக்குன்னு இருக்குற நம்பிக்கையும், மதிப்பும் மாறாது. மேலும், நீ இங்க எனக்கு எதுவுமே நல்லா நடக்கல அப்படின்னு உனக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தா, அது உன்ன சுத்தி இருக்கிற எல்லா நபர்களுக்கும், உன்னுடைய  செயல்கள் வழியா தெரியவரும். ஏன்னா நீ அதை மனசுல வச்சு தான் அந்த விஷயத்தை  பேசுறது, நடந்துக்கிறது மற்ற எல்லாத்துலயும் கூட. அதுவும் நீதான். களம் தான் வேறு விளையாட்டு ஒன்றுதான். அதனால நீ  எந்த அளவுக்கு உன்னோட நம்பிக்கையையும் மதிப்பையும் நிறைவா நினைக்கின்றாயோ அதுல தான் உன்னுடைய நான் அறியப்படுவான்.

.

அவனின் அந்த நிலை உணரக்கூடியது, அது அனுபவிக்க கூடியது அவ்வளவுதான். காற்றை போல, பிடித்தமான உணவின் ருசியை போல, குழந்தையின் அன்பை போல, உணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டமைக்கப்படுவது. வாழ்க்கை எளிதானது, ஒவ்வொரு கணங்களிலும் உணரப்பட, வேண்டியது, புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் கூட.

Q: Yes i get it batchmate இங்க அதுதான் நிம்மதி என்று மனிதர்கள் வேண்டும் தேடல் என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு அவசரமா பரபரப்பாக வாழ்க்கை போனாலும் ஏதோ ஒன்னு mis ஆகற மாதிரி தோணும் உள்ளுக்குள்ள. நீங்க சொன்னீங்களே ஒரு நாம அப்படி என்கிற நிலை அதை அடைந்தால் தான் இது கிடைக்கும் என்றும் நான் நம்புறேன். ஆனால் அதை எளிமையா கிடைக்க முடியாத வகையில வெளிப்புற சூழல் பல காரணங்கள தூக்கி போட்டுக்கிட்டே இருக்குதே?

A: அதெல்லாம் தாண்டி நாம யாரு அப்படிங்கறது கண்டுபிடிக்க தேவை, தெளிவான சிந்தனை மற்றும் மனநிலை, அதை நடைமுறையில் பயிற்சி செய்வதற்கான பொறுமையும் திறமையும் கூடவே. ஒரு நாளின் நிகழ்வும், பயனும் அல்ல இது. ஒவ்வொரு நாளும் தொடர வேண்டியது என்கிற புரிதல். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இயல்பில் பழக்கப்படுத்தி கொள்வது கொஞ்சம் சவால் தான், இருந்தாலும் முயற்சிப்போம்..!




Comments

Popular Posts