நவீன சமுகத்தின் வேட்டையாடி விலங்காகிய நான்
சமுக வலைதளத்தில்பெண் பெயரில் உள்ளஆண்களையும் விட்டு வைக்காத,எனது அடையாளத்தை அடிக்கடிஅதில் அடைய துடிக்கும் நான்.அறிமுகம் ஆன ஐந்தே நிமிடங்களில்ஆடைகள் அவிழ்க்க சொல்வதில்வெட்கத்தை விற்று விட்டு,அந்தரங்கம் தொடங்கிஉள்ளாடையின் எல்லை வரைகண்கள் மேய,நினைவெல்லாம் காமம் தோய,தொலைபேசியின் வழியேகற்பழிக்கும் கலையை பயின்ற நான்,பள்ளி குழந்தையோ,பிறந்த குழந்தையோ,பருவ பெண்ணோ,உருவம் திரண்டமுதியவளோ,வயதின் மூப்போ,இளமையின் சேர்ப்போ,அவள் பிறப்புறுப்புபெற்றிந்தால் போதும்,எனது அடையாளம்அடைய துடிக்கும்உணர்ச்சி பிரியன் நான்.ஆடைகள் விலகும்இடங்களை வெறித்துதேடும் கண்களோடுஆடைகளின் சுதந்திரத்தைஅந்தரங்க உறவின்அழைப்பென அலையும்மனப் பிறழ்சியுடைய நான்,அவளுக்கும் உணர்ச்சியுண்டுஎன்னை விட வென்றுஅரைகுறை வசனங்களின்உதவியோடும்ஆபாசங்களை அவிழ்த்துவிடும்சினிமாவின் துணிவோடும்,அசிங்கமென அறிந்தும்அவளிடம்அதை அழகாக ரசிக்கபேசுவதில் அலாதியானஇன்பம் காணும் நான்.அவசரமான பேருந்துநெரிசலோ,அழகான பூங்காவோ,அவளின் மானத்தை,பெருந்தன்மையை,கும்பலை பயன்படுத்திவக்கிரம் செய்வதில்சுகம் தேடும் நான்.மீசை அரும்பும் முன்ஆசை அதிகம் வளர்த்துஅடையாளத் திமிரோடுஆசையாய் அன்பாய்பழகும் அவள்களிடம்,ஆண் பெண் உறவின்முதரிச்சி படுக்கையறைஉறவென்றும்,நட்பிலும் இது சரியென்றும்,என் காமத்தின் தேவைக்குசெய்யும் களவாடால்களைநியாமென போற்றி நடிக்கும்நவீன விலங்காகிய நான்,அகவை பாதி வாழ்க்கைகடந்த போதும்,பாசம் காட்ட வேண்டியவயதில் உள்ள அவள்களிடம்,அக்கறையாய் பேசி,உறவினர் என்ற போர்வைக்குள்ஒளிந்து கொண்டு,இச்சையை தீர்த்து கொள்ளும்அவலத்திற்கு சிறிதும்சபலம் கொள்ளாதபசு தோல் போர்த்தியபுலியாகிய நான்.ஒரு ஆண் என சொல்லி கொள்வதில்பெரிதாக பெருமைப்படுகிறேன்?



Nice
ReplyDelete